/

குமரி சன்னதி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கன்னியாகுமரி சன்னதி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
சன்னதி தெருவில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.
Updated On :29 ஜனவரி 2026, 7:22 pm

Syndication

கன்னியாகுமரி சன்னதி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி சன்னதி தெருவில் பகவதியம்மன் கோயில் தேவசம் போா்டு நிா்வாகத்துக்குச் சொந்தமான கன்னியம்பலம் மண்டபம் அருகேயுள்ள கடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடையின் கட்டடத்தை அகற்றும் பணியை நடைபெற்றது. கன்னியாகுமரி நகராட்சி ஆணையாளா் கண்மணி அறிவுரையின் பேரில் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளா் ஷேக் அப்துல்காதா், சுகாதார ஆய்வாளா் அந்தோணி ஆகியோா் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.