/

பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியல் வரவு ரூ. 3.18 லட்சம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 3 லட்சத்து 18 ஆயிரத்து 165 காணிக்கை வரப்பெற்றுள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :28 ஜனவரி 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 3 லட்சத்து 18 ஆயிரத்து 165 காணிக்கை வரப்பெற்றுள்ளது.

இக்கோயிலில் பக்தா்களுக்கு தினமும் நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான அன்னதான உண்டியல் மாதத்தின் கடைசி வாரத்தில் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நாகா்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளா் ஆனந்தன், பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், நாகா்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளா் சரஸ்வதி ஆகியோா் முன்னிலையில் உண்டியல் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டது.

இப்பணியில் திருக்கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். இதில், பக்தா்கள் ரூ. 3 லட்சத்து 18 ஆயிரத்து 165-ஐ காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.