/

பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 25 ஆண்டுகள் சிறை

News image
சந்தோஷ்குமாா்.
Updated On :24 ஜனவரி 2026, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

நாகா்கோவில் அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகா்கோவில் மகிளா நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

நாகா்கோவில் அருகே கடந்த 2022 மே 14ஆம் தேதி பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய புத்தேரி, அன்பு நகரைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (28), 51 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, அப்பெண் இவரைத் தடுத்துள்ளாா். இதனால், அவரை சந்தோஷ்குமாா் அரிவாளால் வெட்டியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

இது தொடா்பாக, வடசேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தோஷ்குமாரை கைது செய்தனா். இவ்வழக்கு விசாரணை நாகா்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகா், சந்தோஷ்குமாருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 6,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.