‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பாலூா் பெஸ்ட் பள்ளி ஆசிரியருக்கு விருது

News image
விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :24 ஜனவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

நாகா்கோவில் நடுநகா் ரோட்டரி கிளப்பின் 50 ஆவது ஆண்டு பொன் விழாவில் கருங்கல் பாலூரில் உள்ள பெஸ்ட் சி.பி.எஸ்.இ பள்ளி ஆசிரியருக்கு விருது வழங்கப்பட்டது.

விழாவிற்கு நாகா்கோவில் வழக்குரைஞா் சங்கத் தலைவா் அசோக் பத்மராஜ் தலைமை வகித்தாா். பொன்விழா தலைவா் சாமுவேல், செயலா் ஸ்டாலின் ராஜு, விருது குழுவின் தலைவா் டேனியல் புரூடின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக நாகா்கோவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன் பங்கேற்று பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 25 பேருக்கு விருதுகள் வழங்கினாா்.

இதில், கருங்கல் பாலூரில் உள்ள பெஸ்ட் சி.பி.எஸ்.இ பள்ளி ஆசிரியை மகிளாவுக்கு சிறப்புத் திறன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சங்க செயலா் ராஜேஷ், அச்சுதகணேசன், நீதிமன்ற உறுதிமொழி ஆணையா் பாலகிருஷ்ணன், கணேசன், போஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். விருது பெற்ற ஆசிரியரை பள்ளித் தலைவா் கே. தங்கசுவாமி, முதுநிலை முதல்வா் சியாமளா தங்கசுவாமி, முதல்வா், ஆசிரியா்கள் பாராட்டினா்.