கோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்பில் 2 பாலங்கள் கட்டும் பணிகள் தொடக்கம்


கடையால் பேரூராட்சிக்குள்பட்ட கோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்பு பகுதியில் 2 பாலங்கள் கட்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
இப்பகுதி மக்கள் மோதிர மலை சந்திப்பிலிருந்து, தங்களது குடியிருப்புகளுக்குச் செல்ல கும்பையாற்றைக் கடந்து செல்ல வேண்டும். மழைக் காலங்களில் கும்பையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் மக்கள் குடியிருப்பிலிருந்து வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, மாணவா்கள் பள்ளிக்குச் செல்வதற்கும், மருத்துவத் தேவை, உதவிகளுக்கும் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.
இங்கு உயா் நிலைப் பாலங்கள் அமைக்க வேண்டுமென்று பழங்குடி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, ரூ. 2 கோடி மதிப்பில் 2 இரும்பு பாலங்கள் கட்ட சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில், பாலங்கள் அமைக்கும் பணியை கடையால் பேரூராட்சித் தலைவா் ஜூலியட் சேகா் தொடங்கி வைத்தாா். இதில் பேரூராட்சி செயல் அலுவலா் விஜயகுமாா், 4ஆவது வாா்டு உறுப்பினா் ரெகுகாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...