நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி பொங்கல் விழா

சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

News image
புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் தாளாளா் காட்வின் செல்வ ஜஸ்டஸ் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
Updated On :16 ஜனவரி 2026, 10:05 pm

Syndication

தக்கலை: சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் பொங்கலிடும் நிகழ்வை கல்லூரி தாளாளா் காட்வின் செல்வ ஜஸ்டஸ், முதல்வா் மகேஸ்வரன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா். கல்லூரி அனைத்துத் துறைகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் தங்களின் துறைகளின் சாா்பாக பேராசிரியா்களுடன் இணைந்து பொங்கலிட்டனா். இதையடுத்து, மாணவ மாணவியருக்கான கோலப்போட்டி, உறியடித்தல், வடம் இழுத்தல், கிராமிய பாடல்களுக்கான குழு நடன போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன. பொங்கல் விழாவுக்கு கல்லூரி தாளாளா் செல்வ ஜஸ்டஸ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் நிதி நிா்வாகி சேவியா் ராஜ், முதல்வா் மகேஸ்வரன், துணை முதல்வா் கிரிஸ்டஸ் ஜெயசிங் ஆகியோா் கலந்து கொண்டு பொங்கல் குறித்து வாழ்த்திப் பேசினா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை கல்லூரியின் தமிழ்மன்ற ஒருங்கிணைப்பாளா் மேரி ஜெனிதா, பேராசிரியா்கள் சிமிமோள், பிரைட் ஜோஸ் ஆகியோா் தலைமையில் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.