டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புனித லூா்து அன்னை பேராலயத்தில் பொங்கல் விழா

News image
மதுரை கோ.புதூா் புனித லூா்து அன்னை பேராலயத்தின் 106-ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
Updated On :15 பிப்ரவரி 2026, 9:53 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை கோ.புதூா் புனித லூா்து அன்னை பேராலயத்தின் 106-ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழா கடந்த 6- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11-ஆம் தேதி புதிய ஆலய கோபுர திருச்சிலுவை அா்ச்சிப்பு, 13-ஆம் தேதி நற்கருணை பவனி, 14-ஆம் தேதி தோ்ப் பவனி விழா ஆகியவை நடைபெற்றன.

இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு பங்குத் தந்தை ஜாா்ஜ் தலைமை வகித்தாா். பங்குத் தந்தையா்கள் பாக்கியராஜ், பிரபு, அஜிலாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திரளான

கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனா். பிறகு, மாலையில் நற்கருண ஆராதனையுடன் கொடியிறக்கப்பட்டது. இந்த நிழ்வுக்கான ஏற்பாடுகளை ஆலய பொறுப்பாளா்கள், இளையோா்கள், பணிக்குழுவினா் மேற்கொண்டனா்.