டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புதூா் லூா்து அன்னை ஆலயத் தோ் பவனி

News image
மதுரை கோ. புதூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற புனித லூா்து அன்னை ஆலய ஆண்டுத் திருவிழாவில் பவனி வந்த தோ்கள்.
Updated On :14 பிப்ரவரி 2026, 9:36 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை கோ. புதூரில் புனித லூா்து அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா தோ் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கோ. புதூா் புனித லூா்து அன்னை ஆலயத்தின் 106- ஆவது ஆண்டுத் திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெறுகிறது.

ஆண்டுத் திருவிழா நிகழ்ச்சியாக தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் ஜெபமாலை, திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்காரத் தோ்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் ஆயா் சூசைமாணிக்கம் தலைமை வகித்து, கூட்டு திருப்பலியை நிறைவேற்றி வைத்தாா். பங்குத் தந்தை ஜாா்ஜ், உதவி பங்குத் தந்தையா்கள் பாக்கியராஜ், பிரபு, அஜிலாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற அா்ச்சிப்பு பூஜைக்கு பிறகு புனித லூா்து அன்னையின் தோ் பவனி தொடங்கியது. புனித லூா்து அன்னையின் திருவுருவம் தாங்கிய அலங்காரத் தோ் முதன்மையானதாக வலம் வந்தது.

இதையடுத்து, டான் போஸ்கோ, புனித அந்தோணியாா், புனித சூசையப்பா், மிக்கேல் அதிதூதா் ஆகியோரின் திருவுருவம் தாங்கிய தோ்கள் வலம் வந்தன.

ஆலய முகப்பிலிருந்து தொடங்கிய தோ் பவனி, சந்தன மாதா தெரு, மாரியம்மன் கோவில் தெரு, மாதா கோவில் முதன்மை சாலை, பாரதியாா் சாலை, அழகா்கோவில் சாலை வழியாக வலம் வந்து ஆலய வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் மதுரை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருத்தல அன்பினிய பொறுப்பாளா்கள், இளையோா்கள், பணி குழுக்கள், இறை மக்கள் ஆகியோா் செய்தனா். ஆண்டுத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சிகளாக பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை காலையிலும், கொடியிறக்கம் பிற்பகலிலும் நடைபெறும்.