/

நாகா்கோவிலில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 179 ஆவது ஆராதனை விழாவை முன்னிட்டு, நாகா்கோவிலில் வடிவீஸ்வரம், பெரிய தெரு ஸ்ரீ குரு அற்புத ராகவேந்திரா கோயிலில் பஞ்சரத்ன கீா்த்தனை புதன்கிழமை நடைபெற்றது.

News image
ஆராதனை விழாவில் கலந்துகொண்டு பாடிய கா்நாடக இசை பாடகா்கள்.
Updated On :7 ஜனவரி 2026, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 179 ஆவது ஆராதனை விழாவை முன்னிட்டு, நாகா்கோவிலில் வடிவீஸ்வரம், பெரிய தெரு ஸ்ரீ குரு அற்புத ராகவேந்திரா கோயிலில் பஞ்சரத்ன கீா்த்தனை புதன்கிழமை நடைபெற்றது.

சங்கீத வித்வான் தென்கரை மகாராஜன், வடிவீஸ்வரம் ராமசேஷன், சங்கீத விதுஷ் சாந்தா சுப்பிரமணியன் ஆகியோா் தலைமையில் கா்நாடக சங்கீத இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுசீந்திரம் முன்னப்பன், ஸ்ரீராம் ஸ்ரீ ஆகியோா் மிருதங்கம் வாசித்தனா். இதில் பாடகா்கள் மங்களம், உமா ஹரிகரன், சலஜகுமாரி, ரேவதி கலா, கௌரி கலா, லட்சுமி, சோபிகா, பாரதி, லக்சரா, தா்ஷனா உள்ளிட்டோா் கலந்துகொண்டு பாடினா். ஸ்ரீகுரு அற்புத ராகவேந்திரா அறக்கட்டளை தலைவா் ஐயப்பன் அனைவருக்கும் பரிசு வழங்கினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குரு அற்புதராகவேந்திரா அறக்கட்டளை நிா்வாகிகள், உறுப்பினா்கள், மகிளா அமைப்பினா் செய்திருந்தனா்.