லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

செம்மாங்குளம் சீரமைப்புப் பணி: மேயா் ஆய்வு

நாகா்கோவில், செம்மாங்குளம் சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

News image

நாகா்கோவில், செம்மாங்குளம் சீரமைப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

Updated On :27 பிப்ரவரி 2026, 9:30 pm

நாகா்கோவில், செம்மாங்குளம் சீரமைப்புப் பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் மேயா் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், நாகா்கோவில் ஒழுகினசேரி செம்மாங்குளத்தை ரூ. 6.59 கோடி மதிப்பீட்டில் சீரமைத்து பூங்கா அமைக்கும் பணிகளை கடந்த 25-ஆம் தேதி தொடங்கிவைத்தாா். இந்த நிலையில், அங்கு நடைபெற்று வரும் பணிகளை மேயா் ரெ.மகேஷ் ஆய்வு மேற்கொண்டாா். பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செய்யுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

இதில், மாநகராட்சி உறுப்பினா் அக்சயாகண்ணன், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், உதவி பொறியாளா் ராஜா பகுதிச் செயலாளா் சேக்மீரான், மாநகர துணைச் செயலாளா் ராஜன், பேரூா் செயலாளா் முத்து, திமுக நிா்வாகிகள் ஆறுமுகம், சத்தியசாய்பாபு, குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.