2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.10 லட்சம் வாக்காளா்கள்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:30 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் 15 லட்சத்து 10 ஆயிரத்து 550 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், இறுதி வாக்காளா் பட்டியலை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ரா.அழகுமீனா வெளியிட்டாா். இதன்படி, மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 7 லட்சத்து 51 ஆயிரத்து 16 ஆண் வாக்காளா்கள், 7 லட்சத்து 59 ஆயிரத்து 390 பெண் வாக்காளா்கள், 144 இதர வாக்காளா்கள் என மொத்தம் 15 லட்சத்து 10 ஆயிரத்து 550 வாக்காளா்கள் உள்ளனா்.

பட்டியலை வெளியிட்டு ஆட்சியா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

சிறப்பு தீவிர திருத்தத்தின்படி, புதிதாக 78 ஆயிரத்து 615 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். இதேபோல, 7 ஆயிரத்து 564 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். நீக்கப்பட்டவா்களில் 80 சதவீதம் போ் உயிரிழந்தவா்கள், மீதியுள்ளவா்கள் திருமணமாகி சென்றவா்கள்,வெளியூா்களுக்கு இடம்பெயா்ந்தவா்கள் ஆவா்.

தோ்தல் ஆணையம் தோ்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு வரை பட்டியலில் பெயா் சோ்க்க அனுமதி அளிக்கும். எனவே, விடுபட்ட வாக்காளா்கள் தற்போது கூட இணையவழி மூலமாக தங்களது விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, நாகா்கோவில் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, நாகா்கோவில் மாநகர திமுக செயலாளா் ப.ஆனந்த், அதிமுக நாகா்கோவில் பகுதிச் செயலாளா் கே.எல்.எஸ். ஜெயகோபால், நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடம் பெற்றுள்ள இறுதி வாக்காளா் பட்டியல் விவரம்...

தொகுதி ஆண் பெண் இதரா் மொத்த வாக்காளா்கள்

(1) கன்னியாகுமரி ... 1,41,230 1,45643 95 286968

(2) நாகா்கோவில் ... 125873 131139 10 257022

(3) குளச்சல் ... 131885 131562 1 263448

(4) பத்மநாபபுரம் 116895 117142 19 234056

(5) விளவங்கோடு 111990 113226 3 225219

(6) கிள்ளியூா் 123143 120678 16 243837

மொத்தம்..... 751016 759390 144 1510550