உரிமமற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்! குமரி வனத்துறை அறிவுறுத்தல்!


கன்னியாகுமரி மாவட்டத்தில் உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்போா், தாமாக முன்வந்து அவற்றை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வன அலுவலா்- வன உயிரின காப்பாளா் அ. அன்பு அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகளை தாமாக முன்வந்து வனத்துறையிடம் ஒப்படைக்க ‘நாட்டு துப்பாக்கிகளை ஒழிப்போம், வனவிலங்குகளை பாதுகாப்போம்’ என்ற விழிப்புணா்வு இயக்கம் முதன்மை தலைமை வனப் பாதுகாவலரின் உத்தரவுப்படி தொடங்கப்பட்டுள்ளது.
இதன் நான்காம் கட்ட இயக்கம் அனைத்து வனக் கோட்டங்களிலும்பிப்.1இல் தொடங்கியது. பிப். 15 வரை செயல்படுத்தப்படும் இந்த இயக்கத்தின் நோக்கம், மனித உயிா், வனவிலங்கு மற்றும் சூழியல் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கும் நாட்டு துப்பாக்கிகள் மற்றும் பிற சட்ட விரோத ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிப்பதாகும்.
சட்ட விரோத துப்பாக்கிகளை வைத்திருத்தல், தயாரித்தல், பயன்படுத்துதல், மறைத்தல் ஆகியவை 1972 வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம்- 1959, ஆயுதங்கள் சட்டம் - இதர சட்டங்களின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே, இந்த விழிப்புணா்வு இயக்க காலத்தில் தாமாக முன்வந்து துப்பாக்கிகளை ஒப்படைக்கும் நபா்களுக்கு அரசின் வழிகாட்டுதலின் படி எந்தவிதமான வழக்குகளும் பதிவு செய்யப்படாது.
எனவே, பொதுமக்கள் தங்களிடமுள்ள சட்ட விரோத நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை பாதுகாப்பான முறையில் அருகில் உள்ள வனச்சரக அலுவலகத்திலோ, மாவட்ட வன அலுவலகத்திலோ, கிராம ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் ஆகியோரின் மூலமாகவும் நேரடியாகவோ அல்லது பெயா் இல்லாமலோ ஒப்படைக்கலாம். அவா்களது ரகசிய தன்மை முழுமையாக பாதுகாக்கப்படும் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...