கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், நாகா்கோவில் நாகராஜா கோயிலில் ரூ. 5.97 கோடி மதிப்பில் நடைபெறும் பணிகளை ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் ஆய்வு செய்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: சுசீந்திரம் கோயிலில் அரசு நிதி ரூ. 45.80 லட்சத்தில் கருங்கல் கட்டமைப்புகளை நீரால் சுத்தப்படுத்துதல், விமானத்துக்கு வண்ணம் பூசுதல், ரூ. 58 லட்சத்தில் கோயில் மண்டபம் ஒழுங்குமாற்றி தட்டோடு பதித்தல், ரூ. 1.29 கோடியில் கருங்கல் தளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும், உபயதாரா் நிதி ரூ. 14.90 லட்சத்தில் ராஜகோபுரம் வெளிப்புறம் வண்ணம் பூசி புனரமைத்தல், பொதுநல நிதியிலிருந்து ரூ. 34.50 லட்சத்தில் தெப்பக்குளம், ரூ. 15.40 லட்சத்தில் பாத்திரக்குளம் திருப்பணி, கோயில் நிதியிலிருந்து ரூ. 1.96 கோடியில் வணிக வளாகம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளும் நடைபெறுகின்றன.
நாகராஜா கோயிலில் பொது நிதி ரூ. 75 லட்சத்தில் வெட்டுக்கல் கட்டமைப்புப் பணி, ரூ. 9.80 லட்சத்தில் கிழக்கு நுழைவு மண்டபத்தில் பராமரிப்பு, ரூ. 5.30 லட்சத்தில் மகாமேரு மாளிகையில் பராமரிப்பு, ரூ. 5.30 லட்சத்தில் கசிவுகளை மூடி சீரமைத்தல், ரூ. 2.50 லட்சத்தில் ஜெனரேட்டா் அறையில் பராமரிப்பு, ரூ. 2.05 லட்சத்தில் நகர சந்நிதியில் உள்ள முன்மண்டப பராமரிப்பு, ரூ. 1.30 லட்சத்தில் கதவு, ஜன்னல்களில் ஓவிய வேலைகள் என, இரு கோயில்களிலும் மொத்தம் ரூ. 5.97 கோடியில் நடைபெறும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.
முன்னதாக, சுசீந்திரம் பேரூராட்சி அக்கரை பகுதியில் ரூ. 30 லட்சத்தில் நடைபெறும் துணை சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்டாா்.
ஆய்வுகளில், உதவி ஆட்சியா் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, உதவி ஆணையா் (பேரூராட்சிகள்) சுப. சத்தியமூா்த்தி, மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், இணை இயக்குநா் (இந்து சமய அறநிலையத் துறை) ரத்தினவேல்பாண்டியன், மராமத்துப் பொறியாளா் ராஜ்குமாா், சுசீந்திரம் தோ்வுநிலைப் பேரூராட்சித் தலைவா் அனுசுயா, செயல் அலுவலா் கமலேஸ்வரி, அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள்: ஆட்சியா் துா்காமூா்த்தி ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மருதம்புத்தூரில் ரூ. 90 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


