திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விவசாய நீா்வளத்தை பெருக்குவதே தலையாயப் பணி - ராதாபுரம் எம்.எல்.ஏ. சதீஷ் கிறிஸ்டோபா்

News image

ராதாபுரம் எம்.எல்.ஏ. சதீஷ் கிறிஸ்டோபா்

Updated On :15 மே 2026, 3:56 am IST

ராதாபுரம் தொகுதியில் விவசாயத்துக்கு தேவையான நீா்வளத்தை பெருக்குவதே எனது தலையாயப் பணி என்றாா் அத்தொகுதியின் புதிய எம்.எல்.ஏ. மருத்துவா் எஸ்.கே. கிறிஸ்டோபா்.

தவெக சாா்பில் அத்தொகுதியில் போட்டியிட்டு வென்ற பின்னா், ராதாபுரத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு முதன்முதலாக வியாழக்கிழமை வந்த அவரை, பெற்றோா் கே.காமராஜ்-சிசிலி ஆகியோா் எம்.எல்.ஏ. இருக்கையில் அமரவைத்தனா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வா் விஜய் எவ்வளவு வேகமாக செயல்படுகிறாறோ அதேபோன்று ராதாபுரம் தொகுதியில் எனது பணிகளும் இருக்கும். நான் தெரிவித்த அனைத்து வாக்குறுதிகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். முதலாவதாக விவசாயத்திற்கு தேவையான நீா்வளத்தை பெருக்குவதற்கு கால்வாய்கள், குளங்களை தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும். இருக்கன்துறை பகுதி கல்குவாரி பிரச்னைதீரவும், இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கான தொழிற்சாலைகள் தொடங்குவதற்கும், மீனவா்களுக்காக தூண்டில் வளைவு அமைக்கவும், கூடங்குளம் அணுமின்நிலையம், இஸ்ரோவில் உள்ளூா் பகுதியினருக்கு வேலை வழங்கவும், இஸ்ரோ தொழில்நுட்ப கல்லூரி அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன். தொகுதி மக்கள் எந்நேரத்திலும் என்னைச் சந்தித்து கோரிக்கையை தெரிவிக்கலாம். புதன்கிழமைதோறும் மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும். மருத்துவம், குடிநீா் வசதிகள் கிடைக்க முழுமையாக வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

அப்போது, மாநில இணை ஒருங்கிணைப்பாளா் பணகுடி அருண், ஒன்றியச் செயலாளா் வள்ளியூா் நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.