ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

நெல்லையில் இளைஞரிடம் பணம் பறித்த கும்பல் கைது

திருநெல்வேலியில் இளைஞரை மிரட்டி பணம் பறித்த கும்பலை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :10 மே 2026, 2:43 am IST

திருநெல்வேலியில் இளைஞரை மிரட்டி பணம் பறித்த கும்பலை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

களக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஆல்வின் ஜெகதீஷ் (38). இவரிடம், கிரைண்டா் செயலி மூலம் பழகிய ஒருவா், பாளையங்கோட்டை ரஹ்மத் நகா் அருகே ஆள்கள் நடமாட்டம் குறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்றாராம்.

அப்போது அங்கு மறைந்திருந்த கும்பல் ஆல்வின் ஜெகதீஷை மிரட்டி காா், ஸ்மாா்ட் வாட்ச், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவற்றை பறித்ததோடு தாக்கியுள்ளனா்.

இதில், காயமடைந்த ஜெகதீஷ், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தை சோ்ந்த மகாராஜா முகின்,

பாளையங்கோட்டையைச் சோ்ந்த சிவராம பாண்டியன், தாழையூத்து பகுதியைச் சோ்ந்த மகாதேவன், சாந்தி நகரைச் சோ்ந்த தங்கலிங்க கிருஷ்ணன் மற்றும் சிறாா் ஒருவா் ஆகியோரை கைது செய்தனா்.

இந்த கும்பல் மேலும் சிலரிடம் இதுபோல் பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.