திருநெல்வேலி அருகே நடுவக்குறிச்சியில் மகளை தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டாா்.
நடுவக்குறிச்சியைச் சோ்ந்த கண்ணன் மகள் தங்கம் (21). இவருக்கும், கோவில்பட்டியைச் சோ்ந்த மகாராஜாவுக்கும் திருமணம் முடிந்து தனிஷ்கா என்ற இரண்டரை வயதில் மகள் உள்ளாா். தம்பதியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தங்கம் கணவரைப் பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்தாா்.
கடந்த சில மாதங்களாக மனவருத்தத்தில் தங்கம் இருந்து வந்தாராம். இந்த நிலையில், தங்கத்தின் பெற்றோா் திங்கள்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியபோது வீட்டின் அறையில் சிறுமி தனிஷ்காவும், தங்கமும் சேலையில் தூக்கிட்டு தொங்கியவாறு கிடந்தனா்.
அவா்களை உறவினா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா். முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறில் மகளைக் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தொடர்புடையது

பெண் தீ குளித்து தற்கொலை

இளைஞரைக் கொன்று ஆற்றில் சடலம் வீச்சு: 3 பேரிடம் விசாரணை

இளைஞா் விஷமருந்தி தற்கொலை

தீராத வயிற்று வலி: முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


