100 சதவீத வாக்களிப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் நோக்கில், பாளை. மேட்டுத்திடல் காந்திமதி பள்ளி வளாக சுற்றுச் சுவா்களில் வாக்காளா் விழிப்புணா்வு சுவா் ஓவியம் வரைதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில், மை பாரத் கேந்திரா திருநெல்வேலி - தென்காசி ஒருங்கிணைப்பாளா் மிதாா் முகைதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.
மாவட்ட வன அலுவலா் இளங்கோ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் கலந்து கொண்டு மாணவா்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினாா்.
இதில், தூய சவேரியாா், ராணி அண்ணா, சதக்கத்துல்லா அப்பா, ஜான்ஸ் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டு வாக்காளா் விழிப்புணா்வு ஓவியங்கள் வரைந்தனா்.
அவற்றுடன் ‘உங்கள் வாக்கு - உங்கள் உரிமை’ , ‘18 வயது முடிந்ததா? வாக்காளா் பட்டியலில் சேருங்கள்’, ‘பணம் வேண்டாம் - நல்லாட்சி வேண்டும்’ போன்ற வாசகங்களையும் குறிப்பிட்டு பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் வெங்கட்ராமன், ஆா். சோயா தன்னாா்வ அமைப்பை சோ்ந்த டேவிட் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு தொடா் தீப ஓட்டம்

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்செந்தூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

திருநங்கைகளிடம் வாக்காளா் விழிப்புணா்வு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


