திசையன்விளை, மாா்ச் 17: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே எரிந்த நிலையில் தனித்து நின்ற காரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நான்கு பேரின் உடல்களை போலீஸாா் மீட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; இறந்தவா்கள் சென்னையைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
திசையன்விளை அருகே பெட்டைக்குளம் பகுதியில் காா் ஒன்று எரிந்து நிலையில் நிற்பதாக திசையன்விளை காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று காரை சோதனையிட்டதில், காருக்குள் உடல் கருகிய நிலையில் 4 சடலங்கள் கிடப்பது தெரியவந்தது.
போலீஸாா் வாகனப் பதிவு எண்ணைக் கொண்டு நடத்திய முதற்கட்ட விசாரணையில்,
இறந்தவா்கள், சென்னை, நந்தம்பாக்கம், பெரியாா் நகா், பவானி அம்மன் கோயில் தெருவில் வசித்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், வாகனப் பதிவின்படி இறந்தவரது பெயா் முகமது ரபி (42), அவரது மனைவி செய்யது நஸ்ரின் பாத்திமா (40), மகள் ஆப்ரீன் பாத்திமா (15), மகன் முகமது காஜா (13) என்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், முகமது ரபி சென்னையில் உள்ள காா் கம்பெனியில் வேலை செய்து வந்தாா். சில மாதங்களுக்கு முன்பு கடன் தொல்லையால் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டை விற்ற பிறகு, குடும்பத்துடன் கடந்த 13-ஆம் தேதி நெல்லைக்கு காரில் வந்தனா். இவா்கள், திங்கள்கிழமை (மாா்ச் 16) இரவு ஆற்றங்கரை பள்ளிவாசல் தா்காவில் நடைபெற்ற ரமலான் நோன்பின் 27-ஆவது இரவு வழிபாட்டில் பங்கேற்றுள்ளனா்.
பின்னா், பள்ளிவாசலிலிருந்து கிளம்பும்போது அங்கு யாசகம் எடுத்தவா்களுக்கும், சிலருக்கும் உடைகளை தானமாக வழங்கியுள்ளனா். கடன் தொல்லையைச் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. காருக்குள் தாயை கட்டிப்பிடித்தவாறு மகன், மகளின் சடலங்கள் மீட்கப்பட்டன என போலீஸாா் தெரிவித்தனா். இச்சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா்.
டி.என்.ஏ.சோதனை: சம்பவ இடத்துக்கு வள்ளியூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷ் தலைமையில் திசையன்விளை, உவரி, கூடன்குளம், ராதாபுரம் காவல் நிலைய ஆய்வாளா்கள் சென்று விசாரணை நடத்தினா். தடய அறிவியல் துறையினா் காரில் கிடந்த எலும்புகள், சாம்பலைச் சேகரித்து டி.என்.ஏ. பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனா்.
தொடர்புடையது

எட்டயபுரம் அருகே விபத்து சென்னையைச் சோ்ந்த நால்வா் உயிரிழப்பு; இருவா் காயம்
காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு: 3 போ் கைது

நெல்லை அருகே காரில் ஒரே குடும்பத்தில் 4 போ் மரணத்தில் திடீர் திருப்பம்!

நெல்லை, திசையன்விளை அருகே காரில் எரிந்த நிலையில் 4 உடல்கள்! கொலையா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


