திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

உணவகத்தில் தகராறு: ஒருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :8 மார்ச் 2026, 9:25 pm

கல்லிடைக்குறிச்சி, மேல்முக நாடாா் தெருவில் உள்ள உணவகத்தில் தகராறில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்; மூவரைத் தேடி வருகின்றனா்.

உணவகத்தில் சனிக்கிழமை இரவு சில இளைஞா்கள் தகராறில் ஈடுபட்டனராம். அதை அலெக்சாண்டா் என்பவா் கண்டித்த நிலையில், அவா் உள்ளிட்ட 3 பேரை அந்த இளைஞா்கள் தாக்கியுள்ளனா்.

இதில் பலத்த காயமடைந்த அலெக்சாண்டா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். லேசான காயமடைந்த மற்ற இருவா் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக, கல்லிடைக்குறிச்சி போலீஸாா் 4 இளைஞா்கள் மீது வழக்குப் பதிந்து, ஹரிராம் என்பவரை கைது செய்தனா். மேலும், மூவரைத் தேடி வருகின்றனா்.