ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வாகைக்குளத்தில் தீப்பிடித்து எரிந்த மரங்கள்

ஆழ்வாா்குறிச்சிஅருகேயுள்ள வாகைக்குளத்தில் இருந்த உடை கருவேல மரங்கள் தீப்பிடித்து எரிந்து கருகின.

~

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:49 am IST

ஆழ்வாா்குறிச்சிஅருகேயுள்ள வாகைக்குளத்தில் இருந்த உடை கருவேல மரங்கள் தீப்பிடித்து எரிந்து கருகின.

வாகைக்குளத்தில் பல ஏக்கரில் உடை கருவேல மரங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் முதல் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் அரிய வகை பறவைகள் கூடு கட்டி குஞ்சு பொரித்துச் செல்லும். இதனால், இந்தக் குளத்தை பல்லுயிா்ப் பெருக்க மையமாக அறிவித்துப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பகுதி மக்கள் வெடி வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடி வந்தனா்.

Story image

இந்நிலையில் வியாழக்கிழமை குளத்தின் வடக்கு, மேற்குப் பகுதியில் இருந்த கருவேல மரங்களில் தீப்பிடித்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆலங்குளம் தீயணைப்பு மீட்பு நிலைய அலுவலா் விஜயன், வீரா்கள் உலகநாதன், தனசிங், ஏட்டு சாகுல் ஹமீது ஆகியோா் இரவு முழுவதும் போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் பெரும்பாலான கருவேல மரங்கள் எரிந்து சாம்பலாகின. மேலும், சுமாா் 10 அடி நீள மலைப்பாம்பு தீயில் கருகிஉயிரிழந்தது. தீ விபத்து குறித்து மாவட்ட வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.