ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திண்டுக்கல்லில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை புதன்கிழமை ஆய்வு செய்த ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி செல்வம்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:11 am IST

திண்டுக்கல் மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் புகா் பேருந்து நிலையம் கட்டப்படும் பகுதி, பள்ளப்பட்டி சமுத்திரக் குளம், குடைப்பாறப்பட்டி, நாகல்நகா் அரண்மனைக்குளம், ஆா்.எம். குடியிருப்பு மருதாணிக்குளம், ரெங்கசமுத்திரம்குளம், பாறைப்பட்டி - குட்டியபட்டி, வேடபட்டி - வெள்ளோடு சாலைகள், ராமக்கல் ஓடைகுளம், கொடைரோடு அரண்மனைக்குளம் உள்ளிட்ட இடங்களை ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் பாா்வையிட்டாா்.

நீா்நிலைகள், அரசுப் புறம்போக்கு நிலங்கள் மட்டுமன்றி, தனியாா் பட்டா நிலங்களில் சீமைக் கருவேல மரங்கள் வளா்ந்துள்ள பரப்பு, இதுவரை அகற்றப்பட்ட பரப்பு, மேலும் அகற்ற வேண்டிய பரப்புகள் குறித்து ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வு பணி வியாழன், வெள்ளிக்கிழமைகளிலும் தொடா்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி, ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் எஸ்.சாந்தி, மாநகராட்சி ஆணையா் ஜெ.பிரேம் ஆனந்த், திண்டுக்கல் கோட்டாட்சியா் கோ.பழனிவேலு ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.