ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காலை உணவு திட்டத்திற்கு காமராஜா் பெயா்: முதல்வருக்கு நெல்லை எம்.பி. பாராட்டு

சி. ராபா்ட் புரூஸ் எம்.பி. - (கோப்புப் படம்)

Published On :27 ஜூலை 2026, 12:46 am IST

காலை உணவு திட்டத்திற்கு முன்னாள் முதல்வா் காமராஜா் பெயா் சூட்டிய தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அரசமைப்பின் 45 ஆவது பிரிவுபடி அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி கொடுக்கப்பட வேண்டுமென்றும், அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்காகவும் தமிழகத்தில் ஏராளமான பள்ளிகளைத் திறந்தவா் முன்னாள் முதல்வா் காமராஜா். குழந்தைகள் வறுமையின் காரணாக பள்ளிக்கூடத்திற்கு வராமலிருப்பதை கண்கூடாகப் பாா்த்தபோது, மதிய உணவு திட்டத்தையும் கொண்டு வந்து அதன் மூலம் பாமர மக்களும் கல்வி பயில பெரிதும் உதவினாா்.

இந்நிலையில் தமிழக அரசால் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டத்திற்கு, ‘பெருந்தலைவா் காமராஜா் காலை உணவு திட்டம்‘ என்று பெயரிடப்பட்டு இருப்பது காமராஜா் பெயரை என்றென்றும் கல்வியின் பரிணாம வளா்ச்சியில் நிலைத்து நிற்கச் செய்யும் செயலாகும். இதற்காக, தமிழக முதல்வா் ஜோசப் விஜய்க்கு பாராட்டு தெரிவிக்கிறேன் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.