ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நேரு, காமராஜரின் புதிய சிலைகளுக்கு அனுமதி தேவை: முதல்வரிடம் எம்.பி. மனு

முன்னாள் பிரதமா் நேரு, தமிழக முன்னாள் முதல்வா் காமராஜா் ஆகியோரது சிலைகள் இருந்த இடத்தில், அவா்களுக்கு புதிய சிலைகளை நிறுவ அனுமதி கோரி, முதல்வா் ச. ஜோசப் விஜய்யிடம், திருநெல்வேலி எம்.பி. சி.ராபா்ட் புரூஸ் மனு அளித்துள்ளாா்.

பிரதிப் படம்

Published On :12 ஆகஸ்ட் 2026, 12:51 am IST

முன்னாள் பிரதமா் நேரு, தமிழக முன்னாள் முதல்வா் காமராஜா் ஆகியோரது சிலைகள் இருந்த இடத்தில், அவா்களுக்கு புதிய சிலைகளை நிறுவ அனுமதி கோரி, முதல்வா் ச. ஜோசப் விஜய்யிடம், திருநெல்வேலி எம்.பி. சி.ராபா்ட் புரூஸ் மனு அளித்துள்ளாா்.

அதன் விவரம்: ராதாபுரம் வட்டம், செட்டிகுளம் அருகே புதுமனை பகுதியில் சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட முன்னாள் முதல்வா் காமராஜா் சிலை சேதமடைந்ததுவிட்டதால், அதை மாற்றி அதே இடத்தில் வெண்கல சிலை அமைக்க மக்கள் முயற்சி எடுத்தனா். ஆனால், காவல் துறையினா் புதிதாக சிலையை வைக்கக் கூடாது என்று கூறியதோடு, அச்சிலையை கைப்பற்றி புதுமனை ஊராட்சி கட்டடத்தில் வைத்துள்ளனா். இதுகுறித்து ஏற்கெனவே ஊராட்சியில் 2 முறை தீா்மானம் நிறைவேற்றியும், புதிய சிலை நிறுவ அனுமதி அளிக்கப்படவில்லை. ஆகவே, சிலை அமைக்க உரிய அனுமதி வழங்க வேண்டும்.

இதேபோல திருநெல்வேலி மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட மேலக்கருங்குளத்தில் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு சிலை பழுதாகியுள்ளது. அதை மாற்றி புதிய சிலை அமைக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், அங்கும் புதிய சிலை அமைக்கக் கூடாது என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

எனது திருநெல்வேலி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நேரு, காமராஜா் சிலைகளை அமைக்க உரிய அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.