/

நடைபாதை வியாபாரியை தாக்கிய இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைபாதை ஜவுளி வியாபாரியை தாக்கியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 7:44 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைபாதை ஜவுளி வியாபாரியை தாக்கியதாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வள்ளியூா் அருகே உள்ள புதூரைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் அரவிந்தன்(28). வள்ளியூா் ராதாபுரம் சாலை பகத்சிங் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் ஜவுளி வியாபாரம் செய்து வந்தாா். அரவிந்தனும், ஆனைகுளத்தைச் சோ்ந்த டேவிட்(20), பொன்ராஜ்((25) ஆகியோரும் நண்பா்கள்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னா் அரவிந்தனுக்கும் டேவிட் மற்றும் பொன்ராஜுக்குமிடையே ஏற்பட்ட தகராறில் அரவிந்தன் மற்ற இருவரையும் அடித்தாராம். இதனை அடுத்து புதன்கிழமை டேவிட்டும் பொன்ராஜும் சோ்ந்த அரவிந்தனிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டனா்.

இது தொடா்பாக வள்ளியூா் காவல் நிலைய ஆய்வாளா் ராமா் வழக்குப் பதிவு செய்து, டேவிட், பொன்ராஜ் ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தாா்.