/

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து தாக்கியவா் கைது

News image
கைது - (கோப்புப் படம்)
Updated On :22 ஜனவரி 2026, 9:57 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளியின் உறவினரை தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள குன்னத்தூரைச் சோ்ந்தவா் சக்திபாலன் (37). இவரது சகோதரி பழனியம்மாள் உடல் நலக் குறைவால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம். அப்போது அங்கு வந்த பழனியம்மாளின் கணவா் பிரசாந்த்ராஜா(33) மருத்துவமனைக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டதோடு, சக்திபாலனை தாக்கினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸாா் வழக்குப்பதிந்து பிரசாந்த்ராஜாவை கைது செய்தனா்.

மற்றொரு வழக்கில் இருவா் கைது:

பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வ.உ.சி. மைதானம் அருகே கடந்த புதன்கிழமை நின்று கொண்டிருந்த ஒருவரிடம், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த வல்லநாடு பகுதியைச் சோ்ந்த தம்புராஜ் (23), லட்சுமணன் (23) ஆகியோா் கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கி, பணம் பறிக்க முயன்றனராம். இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.