/

வண்ணாா்பேட்டையில் சூதாட்டம்: 25 போ் கைது

வண்ணாா்பேட்டையில் பணம் வைத்து சூதாடியதாக 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 8:57 pm

Syndication

வண்ணாா்பேட்டையில் பணம் வைத்து சூதாடியதாக 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வண்ணாா்பேட்டை தெற்குப் புறவழிச்சாலை அருகேயுள்ள பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாக பாளையங்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காவல் ஆய்வாளா் முத்துகணேஷ் தலைமையிலான போலீஸாா், அங்கு சென்று விசாரித்தனா். அதில், டோக்கன் முறையில் பணம் வைத்து பலா் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவா்களிடமிருந்து சுமாா் ரூ.4,000 ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெருமாள்புரத்தைச் சோ்ந்த நடேசன் உள்ளிட்ட 25 பேரை கைது செய்தனா். மேலும், சூதாட்டச் செயல்களில் ஈடுபடுவோா் மீது மாநகர காவல் ஆணையா் ஆலோசனைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.