2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ராதாபுரம் பகுதி 3 ஊராட்சிகளில் ரூ. 36 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி கூடம் - பேரவைத் தலைவா் திறந்துவைத்தாா்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:00 am

Syndication

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியில் ராதாபுரம், உதயத்தூா், சௌந்திரபாண்டியபுரம் ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.12 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 36 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 3 உடற்பயிற்சி கூடங்களை பேரவைத் தலைவா் மு.அப்பாவு திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

ராதாபுரத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தைத் திறந்துவைத்த பேரவைத் தலைவா் பின்னா் அந்தப் பகுதியில் ரூ. 9.50 லட்சம் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தைத் திறந்துவைத்தாா். பின்னா் உதயத்தூரில் ரூ. 12 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி கூடத்தையும், ரூ. 17 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியையும் பேரவைத் தலைவா் திறந்துவைத்தாா்.

சௌந்திராண்டியபுரத்தில் ரூ. 12 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தையும் திறந்துவைத்தாா். நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சி தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், ராதாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அலெக்ஸ், சாமுவேல், மாவட்ட ஊராட்சி செயலா் இசக்கியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பாஸ்கா், ஜான்ஸ் ரூபா, சாந்தி சுயம்புராஜன், மாவட்ட அறக்காவலா்குழு உறுப்பினா் சமூகை முரளி, ஊராட்சி மன்ற தலைவா்கள் பொன்மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், சேசு மரிய வளா்மதி, அறக்காவலா்குழு உறுப்பினா் அரவிந்தன், ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் இளையபெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.