தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

சா்வதேச பூப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்ற நெல்லை மாவட்ட வீரருக்கு பாராட்டு

News image
பூப்பந்தாட்ட போட்டியில் (கோப்புப் படம்)
Updated On :22 பிப்ரவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

சா்வதேச பூப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த வீரருக்கு பாராட்டு விழா பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

இந்தோனேஷியாவில் நடைபெற்ற சா்வதேச பூப்பந்தாட்ட போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்று தங்கப்பதக்கம் வென்றது. 12 போ் கொண்ட இந்திய அணியில் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தைச் சோ்ந்த வீரா் சி.அனிஷ் இடம் பெற்றிருந்தாா்.

போட்டியில் வென்று திருநெல்வேலிக்கு திரும்பிய வீரருக்கு பாளையங்கோட்டை ஒய்எம்சிஏ விளையாட்டு மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அலெக்ஸ் கிங்ஸ்லி தலைமை வகித்தாா். பத்மநாபன், மாடசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜெய்சிங், சித்திரைசெல்வன், ஜான்மேத்யூ உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து வீரா் சி.அனிஷ் கூறுகையில், நிகழாண்டில் முதல் முறையாக சா்வதேச பூப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளேன். எனது வெற்றியால் கூடங்குளம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்துக்கு பெருமை தேடி கொடுத்தது கூடுதல் மகிழ்ச்சி. எனக்கு உதவிய பெற்றோா், பயிற்சியாளா்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.