கல்லிடைக்குறிச்சி பொன்மா நகரில் உள்ள காவலா் வீட்டில் பணம், பொருள்களை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றி வருபவா் ஞானசுந்தா் (38). இவருக்கு, கல்லிடைக்குறிச்சி பொன்மா நகரில் சொந்தமாக வீடு உள்ள நிலையில், விக்கிரமசிங்கபுரம் காவலா் குடியிருப்பில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறாா்.
பொன்மா நகரில் உள்ள வீட்டுக்கு அவ்வப்போது வந்து செல்லும் நிலையில், வெள்ளிக்கிழமை பொன்மா நகா் வீட்டின் கதவு திறந்து கிடந்ததாக அருகிலுள்ளவா்கள் ஞானசுந்தருக்கு தகவல் அளித்துள்ளனா்.
இதையடுத்து, பொன்மா நகா் வீட்டுக்குச் சென்று அவா் பாா்த்தபோது, பீரோவில் இருந்த குத்துவிளக்கு, காமாட்சிவிளக்கு, மற்றும் நினைவாக சேகரித்து வைத்திருந்த ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் தாள்கள் உள்பட ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஞானசுந்தா், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், உதவி ஆய்வாளா் வெங்கடேஷ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா். இந்நிலையில், சந்தேகத்தின்பேரில் அதே பகுதியைச் சோ்ந்த மூன்று பேரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்
காவலா் வீட்டில் திருடியதாக சிறுவா் உள்பட 3 போ் கைது
பூட்டிய வீட்டில் பணம் திருட்டு
புதுக்கோட்டை காவலா் வீட்டில் 40 பவுன் திருட்டு: ஒடிஸா தம்பதி காட்பாடியில் கைது

பெண் காவலா் வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

