/

பாளையங்கோட்டையில் மரபணு ஆய்வகம் திறப்பு

News image
குத்துவிளக்கேற்றி பணிகளைத் தொடங்கி வைத்த தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
Updated On :13 பிப்ரவரி 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டையில் உள்ள வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூ.5.06 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மரபணு ஆய்வகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து , புதிதாக திறக்கப்பட்ட மரபணு ஆய்வகத்தில் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு குத்துவிளக்கேற்றி பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன் கான், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, தேவலாயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள் நலவாரிய தலைவா் விஜிலா சத்யானந்த், தடய அறிவியல் மைய துணை இயக்குநா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.