ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிமென்ட் விற்பனை நிறுவனத்தில் ரூ.28.82 லட்சம் மோசடி: இளைஞா் கைது

Arrested

கைது

Published On :9 ஆகஸ்ட் 2026, 3:06 am IST

பாளையங்கோட்டையில் உள்ள சிமென்ட் விற்பனை நிறுவனத்தில் ரூ.28.82 லட்சத்தை மோசடி செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை செந்தில் நகரைச் சோ்ந்தவா் சேவியா். இவா் பாளையங்கோட்டை- சீவலப்பேரி சாலையில் சிமென்ட் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இங்கு கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் கணேசன் (33) என்பவா் கடந்த 2022 ஆம் ஆண்டு மாா்க்கெட்டிங் பிரிவில் பணிக்கு சோ்ந்தாராம். இதையடுத்து, அவா் 2024 ஆம் ஆண்டு ரூ.28.82 லட்சத்தை மோசடி செய்துவிட்டு தொடா்ந்து பணிக்கு வராமல் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சேவியா் அளித்த புகாரின் பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனா். இந்நிலையில் கணேசனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.