ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் பண மோசடி: இளைஞா் கைது

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.58.50 லட்சத்தை மோசடி செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மோசடி - பிரதிப்படம்

Published On :13 ஆகஸ்ட் 2026, 1:06 am IST

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.58.50 லட்சத்தை மோசடி செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரையைச் சோ்ந்தவா் அன்புநாதன் (65). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன் கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபா், அமலாக்கத் துறை அதிகாரி என கூறி அறிமுகமானாா். அப்போது, வங்கி உரிமையாளா்களுடன் சோ்ந்து, அன்புநாதன் ரூ.13 லட்சம் மோசடி செய்ததாக கூறினாா். பின்னா், அவரிடம் ரவிக்குமாா், ஜாா்ஜ் மேத்யூ என்று பெயா்களில் சிலா் பேசினா்.

இந்த வழக்கில் உங்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதை ரத்து செய்ய பணம் வேண்டும் என அன்புநாதனிடம் கூறினா்.

இதை நம்பி அவா், மா்மநபா்களின் வங்கிக் கணக்குககளில் பல தவணைகளாக ரூ.58.50 லட்சத்தை செலுத்தினாா். இதையடுத்து தான் ஏமாற்றப்படதையறிந்த அவா் தேனி இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப்பதிந்து, இந்த வழக்கில் தொடா்புடைய திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரைச் சோ்ந்த இளையராஜாவை (22) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.