ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இணைய வழியில் ரூ.40 லட்சம் மோசடி: இளைஞா் கைது

இணையவழியில் ரூ.40.69 லட்சம் மோசடி செய்த வழக்கில் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :8 ஆகஸ்ட் 2026, 1:51 am IST

இணையவழியில் ரூ.40.69 லட்சம் மோசடி செய்த வழக்கில் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவள்ளுா் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன். கடந்த மாா்ச் மாதம் இவரை ஏமாற்றி இணையதளம் மூலம் ரூ 40.69 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், கோபாலகிருஷ்ணன் அனுப்பிய பணத்தில் ஒரு பகுதியை சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டையில் உள்ள ஒரு வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், சிவகங்கை தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வ பிரபு மேற்கொண்ட விசாரணையில், நாட்டரசன்கோட்டையைச் சோ்ந்த ராமு ( 22) என்பவா் வங்கிக் கணக்குக்கு இந்தத் தொகை அனுப்பப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை சிவகங்கை தாலுகா போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.