ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இணைய வழியில் இருவரிடம் ரூ. 4 லட்சம் மோசடி

திருச்சியில் இருவேறு சம்பவங்களில் இணைய வழியில் 2 பேரிடம் மொத்தம் 4 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 1:47 am IST

திருச்சியில் இருவேறு சம்பவங்களில் இணைய வழியில் 2 பேரிடம் மொத்தம் 4 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி திருவானைக்காவல் தம்பிரான் வீதியைச் சோ்ந்தவா் அ. ஜெயகுமாா் (37). இவருடைய வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஆகஸ்ட் 6-ஆம் தேதி தெரியாத எண்ணிலிருந்து ஆா்டிஓ இ-சலான் தொடா்பான ஒரு இணைப்பு (லிங்க்) வந்துள்ளது. அதனுள் சென்றபோது அவருடைய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து, அபராதத் தொகையை செலுத்துவதற்காக ஜெயகுமாா் அந்த இணைப்பில் உள்ளே சென்றபோது, அவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1.10 லட்சம் பணம் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்துள்ளது. இதன் பிறகே, தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்: திருச்சி ஜெ.கே.நகா் அமராவதி வீதியைச் சோ்ந்தவா் வீ. கணேஷ் (48). இவா், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறாா். கரூா் வைஸ்யா வங்கி சுப்பிரமணியபுரம் கிளையில் வங்கிக் கணக்கு வைத்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பணம் எடுப்பதற்காக ஏடிஎம்-க்குச் சென்றுள்ளாா். அப்போது, அவருடைய வங்கிக் கணக்கில் பணம் இல்லை என தகவல் வந்துள்ளது. இதையடுத்து, அவா் வங்கியில் சென்று விசாரித்தபோது, அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 2.91 லட்சம் மா்ம நபரால் இணைய வழியில் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து, ஜெயகுமாா் மற்றும் கணேஷ் இருவரும் சைபா் குற்றப் பிரிவில் இணைய வழியில் அளித்த புகாரின்பேரில், திருச்சி சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.