கடையநல்லூர்,ஜூன் 3: தமிழகம் முழுவதும் சுமார் 16 ஆண்டுகளாக குறைவான ஊதியம் பெற்று பணியாற்றி வந்த வளர்கல்விப் பணியாளர்கள் சுமார் 23,000 பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப உரிய பணிகளை வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
1978-ம் ஆண்டில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் பங்கேற்புடன் முதியோர் கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் பணியாற்றிய ஊழியர்கள் அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப ஆசிரியர்களாகவும், அலுவலகப் பணியாளர்களாகவும் பணியமர்த்தப்பட்டனர்
இதையடுத்து அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் கீழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், கருத்தாளர், ஒன்றிய திட்ட ஒருங்கிணைப்பாளர், முதன்மைப் பயிற்சியாளர், அறிவொளித் தொண்டர்கள் என பலர் பணியாற்றி கல்லாமையை அகற்றிடப் பாடுபட்டனர். (இதில் பலர் அரசுப் பணியாளர்கள். இவர்கள் சேவை கருதி மாற்றுப்பணியாக அறிவொளி இயக்கத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது).
இதன் தொடர்ச்சியாக வளர்கல்வி இயக்கம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் படிப்படியாகத் தொடங்கப்பட்டது. இதன் கீழ் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஒன்றிய திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தலைமை வளர்கல்வி மையத் தொடர்பாளர்கள், உதவித் தலைமை வளர்கல்வி மையத் தொடர்பாளர்கள், வளர்கல்வி மையத் தொடர்பாளர்கள், உதவி வளர்கல்வி மையத் தொடர்பாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் மிகக் குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்தனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த இத்திட்டத்தின் கீழ் கிராமம் மற்றும் நகரங்கள்தோறும் வளர்கல்வி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டு தினமும் 6 மணி நேரம் செயல்பட்டு வந்தன.
இத்திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த வளர்கல்விப் பணியாளர்கள், 15 வயது முதல் 35 வயது வரையிலான கல்வியறிவு இல்லாத பொதுமக்களுக்கு வாசிக்கவும், எழுதவும் கற்பிக்கும் பணியினைச் செய்து வந்தனர். பள்ளி செல்லாத குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களைப் பள்ளிகளில் சேர்க்கும் பெரும் பணியையையும் செய்து வந்தனர். அத்துடன் அரசின் திட்டங்களையும், அதனைப் பெறும் வழிமுறைகளையும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து வந்தனர்.
இந்நிலையில் 2009-ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றிய சுமார் 23,000 பணியாளர்களைப் பணியிலிருந்து அரசு திடீரென்று விடுவித்தது. முதியோர் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களை அரசுப் பணியிடத்தில் நியமித்தது போல் தங்களையும் அரசுப் பணியாளர்களாக அரசு பணியமர்த்தும் என்ற நம்பிக்கையில் இருந்த வளர்கல்விப் பணியாளர்கள், அரசின் இந்த நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு வளர்கல்விப் பணியாளர் சங்கத்தின் மாநிலச் செயலர் பி.எஸ்.முருகேசன், மாநிலத் தலைவர் இக்பால் ஆகியோர் கூறியதாவது: 16 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டத்தின் கீழ் 30 மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், 80 மாவட்ட அலுவலகப் பணியாளர்கள், 387 ஒன்றிய திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், 1,274 தலைமை வளர்கல்வி தொடர்பாளர்கள், 1,055 உதவி தலைமை வளர்கல்வி தொடர்பாளர்கள், 10,592 மையத் தொடர்பாளர்கள், 9,621 உதவி மையத் தொடர்பாளர்கள் என 23,009 பேர் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்தோம்.
பணிக்காலத்தில் போலியோ தடுப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரசாரம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆலோசனைகள் வழங்குதல் உள்ளிட்ட சமூகப் பணிகளையும் செய்து வந்தோம். முதியோர் கல்வித் திட்டத்தில் மதிப்பூதியத்தில் பணியாற்றியவர்கள் போன்று எங்களுக்கும் அரசு வேலை வாய்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கையில் வேறு தொழில் குறித்த சிந்தனையில்லாமலேயே வளர்கல்வி திட்டத்துக்காகப் பாடுபட்டு வந்தோம். ஆனால் 2009-ம் ஆண்டு வளர்கல்வி பணியாளர்கள் அனைவரையும், மாற்றுப் பணி எதுவும் வழங்காமல் பணியிலிருந்து அரசு விடுவித்துள்ளது. எனவே அதிமுக அரசு எங்களுக்கு உரிய கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

உலகின் அதிக வெப்பமான 100 நகரங்களில் 98 இந்தியாவில்! நாடு முழுக்க வெப்ப அலை!!

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

