பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பயனற்ற நிலையில் பஸ் நிழற்குடைகள்

கடையநல்லூர்,ஜன.10:    பஸ் நிற்கும் இடத்துக்கும், பயணிகளுக்காக கட்டப்பட்டிருக்கும் பஸ் நிழற்குடைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதுபோல பல இடங்களில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நிழ

Updated On :20 செப்டம்பர் 2012, 1:51 am

கடையநல்லூர்,ஜன.10:    பஸ் நிற்கும் இடத்துக்கும், பயணிகளுக்காக கட்டப்பட்டிருக்கும் பஸ் நிழற்குடைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதுபோல பல இடங்களில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நிழற்குடைகள் அமைப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

 பொதுவாக பேரவை, மக்களவை உறுப்பினர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களின் கோரிக்கைகளை ஏற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பேரவை, மக்களவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிதிஒதுக்கி வருகின்றனர்.

  இதில் கட்சித் தொண்டர்களின் பெரும்பாலான கோரிக்கைகளில் முக்கியமானது தங்கள் பகுதியில் பஸ் நிழற்குடை அமைக்க வேண்டும் என்பதுதான்.

 சில பகுதிகளில் மட்டும்தான் பஸ் நிழற்குடைகள் அமைக்க சரியான இடம் கிடைக்கும் நிலையுள்ளது. கடையநல்லூரைப் பொறுத்தவரை மருத்துவமனை பஸ் நிறுத்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடைகள் பயணிகளுக்கு வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  இங்கு பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன. இதனால் நிழற்குடைகள் பயணிகளால் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன.

 ஆனால் பெரும்பாலான பகுதிகளில் பஸ் நிழற்குடைகள் எதற்காக அமைக்கப்படுகின்றனவோ, அந்த நோக்கம் நிறைவேறுவதில்லை. ஏற்கெனவே பஸ்கள் நின்றுசெல்லும் இடத்தில், பஸ் நிழற்குடை அமைக்க இடமில்லாத நிலையில், கிடைத்த இடத்தில் நிழற்குடைகள் சில லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படுகின்றன.  

 நிழற்குடைகள் அமைக்கப்பட்ட பின்னர், காவல், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே உள்ள பஸ் நிறுத்தத்துக்குப் பதிலாக, புதிதாக நிழற்குடைகள் அமைக்கப்பட்ட இடத்தில் பஸ்களை நின்றுசெல்ல உத்தரவிடுவதில்லை.

 இதனால் நிழற்குடைகள் கட்டப்பட்டு, திறக்கப்பட்ட பிறகும், அவை மாலைநேரப் பொழுதுபோக்கு மையங்களாக மாறி வருகின்றன. மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள பஸ் நிழற்குடைகள் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன.

  எனவே, இனியாவது பயணிகள் பயன்படுத்தும் வகையில் சரியான இடத்தில் பஸ் நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.