தொடர் மழை தீப்பெட்டி தொழில் முடக்கம்
கோவில்பட்டி, நவ. 25: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் கோவில்பட்டி, எட்டையபுரம், கழுகுமலை பகுதிகளில் தீப்பெட்டி தொழில் பாதிப்படைந்துள்ளது. கோவில்பட்டி, எட்டையபுரம், கழுகுமலை, ஏழாயிரம்பண்ணை, இள


கோவில்பட்டி, நவ. 25: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் கோவில்பட்டி, எட்டையபுரம், கழுகுமலை பகுதிகளில் தீப்பெட்டி தொழில் பாதிப்படைந்துள்ளது.
கோவில்பட்டி, எட்டையபுரம், கழுகுமலை, ஏழாயிரம்பண்ணை, இளையரசனேந்தல் ஆகிய பகுதிகளில் இத் தொழில் பிரதான தொழில்.
இப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பகுதி இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், 1,000-க்கும் மேற்பட்ட கையால் செய்யப்படும் தீப்பெட்டி ஆலைகளும் இயங்கி வருகின்றன.
இத் தொழிலில் சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, இத் தொழிலில் 90 சதவிகித பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 25 நாள்களாக தீப்பெட்டி தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
தீபாவளியையொட்டி ஒரு வாரமாக தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டன. பின்னர் அவை வழக்கம்போல இயங்கத் தொடங்கிய வேளையில், கந்த சஷ்டியையொட்டி மழை பெய்ததால் இத் தொழில் பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சில நாள்களாக பெய்து வரும் மழையால் பகுதி இயந்திர தீப்பெட்டி ஆலைகள், கையால் செய்யப்படும் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால், தொழிலாளர்கள் வேலையின்றி அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் மூலப்பொருளான மரக்குச்சிகள் செய்யும் ஆலைகளும் மூடப்பட்டன. இதனால், அங்குள்ள தொழிலாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்.
மழையால் தீப்பெட்டி ஆலையின் செயல்பாடு முற்றிலும் பாதிக்கப்பட்டதால், வெளி மாநிலங்களுக்கு தீப்பெட்டிகளை ஏற்றிச் செல்லும் லாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், லாரி ஓட்டுநர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தீப்பெட்டி ஆலை அதிபர்கள் கூறியதாவது:
வட மாநிலங்களுக்கு தீப்பெட்டி தேவை அதிகமாக உள்ளது. ஆனால், தற்போது பெய்து வரும் மழையால் தீப்பெட்டி உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பாதிப்படைகின்றனர். எங்களுக்கும் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.
தயார் நிலையிலுள்ள தீப்பெட்டிகளை பண்டல்களாக பேக்கிங் செய்ய முடியவில்லை. வட மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப தீப்பெட்டி உற்பத்தி செய்ய முடியாமல் பாதிப்படைந்துள்ளோம் என்றனர் அவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...