எட்டாக் கனியாக பதவி உயர்வு! கவலையில் மகளிர் போலீஸôர்
தென்காசி, ஏப். 17: 1990-91-ம் ஆண்டில் முதல்நிலைக் காவலர்களாகத் தேர்வான மகளிர் போலீஸôர், தங்களுக்கு உதவி ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆரம்பத்தில், பெண்கள் க


தென்காசி, ஏப். 17: 1990-91-ம் ஆண்டில் முதல்நிலைக் காவலர்களாகத் தேர்வான மகளிர் போலீஸôர், தங்களுக்கு உதவி ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரம்பத்தில், பெண்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல், பெண்களைச் சோதனையிடல், பெண் கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துதல் மற்றும் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பணிகளில் மகளிர் போலீஸôர் ஈடுபட்டனர். மேலும், ஆண் போலீஸôருடன் இணைந்து காவல்நிலையங்களிலும் பணிபுரிந்தனர்.
அதன்பிறகு, பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள், குடும்பப் பிரச்னைகள், மாமியார்-மாமனார் கொடுமைகள், வரதட்சிணை கேட்டுத் துன்புறுத்துதல் மற்றும் பெண்களுக்கிடையேலான பிரச்னைகள் போன்றவை தொடர்பான புகார்களின் மீது விசாரணை நடத்தவும், தேவைப்பட்டால் வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்கவும் தமிழகம் முழுவதும் மகளிர் காவல்நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
வழக்கமாக, காவலர்களாகத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 10 ஆண்டுகள் கழித்து முதல்நிலைக் காவலர்களாகவும், அதன்பின் 5 ஆண்டுகள் கழித்து தலைமைக் காவலர்களாகவும், அதன்பின்னர், 10 ஆண்டுகள் கழிந்தபிறகு உதவி ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படும்.
ஒரேயொரு பதவி உயர்வு:
ஆனால், 1986 மற்றும் அதற்குமுன்பு தேர்வு செய்யப்பட்ட மகளிர் போலீஸôர், தேர்வானபோதே முதல்நிலை காவலர்களாக பணி நியமனம் பெற்றனர். சுமார் 22 ஆண்டுகள் வரையில் பணிபுரிந்த பெண் காவலர்களுக்கு, தலைமைக் காவலர் என்ற ஒரேயொரு பதவி உயர்வு மட்டுமே வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முதல்நிலை மகளிர் போலீஸôராகத் தேர்வானவர்கள், தங்களுக்கு உதவி ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து 1986 மற்றும் அதற்கு முன்பு தேர்வு செய்யப்பட்டவர்கள், 2005-ல் உதவி ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு பெற்றனர்.
1990-91-ல், தமிழகத்தில் சுமார் ஆயிரம் மகளிர் போலீஸôர் முதல்நிலைக் காவலர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் பணியில் சேர்ந்து 20 ஆண்டுகளாகியும், ஒரேயொருமுறை மட்டுமே தலைமைக் காவலர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில், 328 மகளிர் உதவி ஆய்வாளர்களும் அடங்குவர். அவ்வாறு அவர்கள் தேர்வு செய்யப்படும்பட்சத்தில், தங்களுடைய பதவி உயர்வு பாதிக்கப்படும் என 1990-91-ல் தேர்வான முதல்நிலைக் காவலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, தற்போது நடைபெற்றுவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், காவல்துறை மீதான மானியக் கோரிக்கையின்போது, தங்களுக்கு உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு வழங்கிட முதலமைச்சர் ஆவன செய்யவேண்டும் என மகளிர் போலீஸôர் விரும்புகின்றனர். மேலும், பிற துறைகளில் உள்ளதைப்போன்று, தங்களுக்கும் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என வும் மகளிர் போலீஸôரிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...