கடையநல்லூர், ஏப். 16: தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் பெற்றுள்ள கடன்கள், பண்ணை சாரா கடன் தீர்வுத் திட்டத்தின் கீழ் தீர்க்கப்படுமா என பயனாளிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் சுமார் 2 லட்சம் பேர் கடன் பெற்று வீடுகளைக் கட்டியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள்.
விவசாயத்தில் போதிய வருவாய் இல்லாத நிலையில் இவர்களால் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் விளைவாக கடன்சுமை பல்மடங்கு பெருகி அவர்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய லீக் கட்சியின் மாநிலச் செயலரும், கூட்டுறவு வீட்டு வசதி சங்கக்கடனால் பாதிக்கப்பட்டவர்கள் நலச்சங்கத்தின் தலைவருமான கடையநல்லூர் வி.எஸ்.கமருதீன் கூறியதாவது:
அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வீட்டுக்கடனுக்கு குறைந்த வட்டியே வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் தொடக்கத்தில் 16 முதல் 17 சதவிகித வட்டியும், தவணைத் தவறிய நிலையில் 18 முதல் 19 சதவிகித வட்டியும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கடன் தொகையை விட, பல மடங்கு அதிகமாக பணம் திருப்பிச் செலுத்திய பின்னரும் கடன் தீர்ந்தபாடில்லை.
இதனால், கடன் வாங்கிய பலர், வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
மேலும், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றுள்ள பலரும் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்பவர்களாகவே உள்ளனர். தவணைக் காலம் தாண்டி பணம் கட்டுபவர்களுக்கு அபராத வட்டி, தவணை தவறிய வட்டி என பலவகையான வட்டிகளைக் கணக்கிட்டு, இதர செலவினங்களையும் சேர்த்து வசூலித்து வருவதால் அசல் தொகை அப்படியே இருந்து வருகிறது.
தாட்கோ மூலம் வீடு கட்ட வாங்கப்பட்ட கடன் தொகையையும், விவசாயிகளின் விவசாயக் கடன்களையும் அரசு தள்ளுபடி செய்துள்ளது.
இந் நிலையில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன்பெற்றவர்களின் கடனை பண்ணை சாரா கடன் தீர்வு திட்டத்தின்கீழ் கொண்டு வந்து, அவர்கள் பெற்ற கடனுக்கு, கடன் பெற்ற தேதியிலிருந்து 6 சதவீத வட்டி மட்டும் வசூலிக்க வேண்டும் எனவும் செலவினங்களையும், அபராத வட்டியினையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், இதற்கான நடவடிக்கை இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு வருகின்ற மானியக் கோரிக்கையின்போது இது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

உலகின் அதிக வெப்பமான 100 நகரங்களில் 98 இந்தியாவில்! நாடு முழுக்க வெப்ப அலை!!

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

