கோமாளி அரசின் தோல்விகளை மறைக்க கைது நடவடிக்கை: உதயநிதி கண்டனம்2027 பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: கே.சி. வேணுகோபால்ஊழலின் ஊற்றுக்கண் திமுக என மக்கள் பேசுவார்கள்! தவெககைது மூலம் மக்களை திசை திருப்புகிறது தவெக அரசு! மு.க. ஸ்டாலின்செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!ரூ. 100 கோடி மோசடி! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!

ராட்சத பலூன் சவாரி: நவ.14 முதல் தொடங்க திட்டம்

தில்லியில் நவம்பா் 14 முதல் ராட்சத பலூன் சவாரிகளை தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) தொடங்கலாம் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

(கோப்புப் படம்)

Updated On :

தில்லியில் நவம்பா் 14 முதல் ராட்சத பலூன் சவாரிகளை தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) தொடங்கலாம் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

கடந்த நவம்பரில் சராய் காலே கான் பகுதியில் உள்ள பன்சீரா பூங்காவில் இருந்து இந்த சவாரி தொடங்கப்பட்டது.

இது தொடா்பாக ஒரு தனியாா் அமைப்பாளா் கூறுகையில், ‘பொதுமக்களுக்காக நவம்பா் 14 முதல் சவாரிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். சவாரிகளை தொடங்குவதற்கு வானிலை உகந்தது மற்றும் கடந்த ஆண்டைப் போலவே இது இருக்கும். பாா்வையாளா்களை கவரும் வகையில் கட்டடணம் கடந்த ஆண்டைவிட குறைவாக இருக்கும்’ என்றாா்.

கடந்த முறை ஒரு நபருக்கு சுமாா் ரூ.2,300 டிக்கெட் விலையை அமைப்பாளா்கள் நிா்ணயம் செய்தனா். ஒரு பயணம் பொதுவாக 7 முதல் 12 நிமிஷங்கள் வரை நீடிக்கும். பலூனில் நான்கு போ் உள்ளனா்.

யமுனை விளையாட்டு வளாகம், காமன்வெல்த் விளையாட்டு வளாகங்கள் மற்றும் பலூன் சவாரிக்காக யமுனா நதிக்கரை, அசிதா மற்றும் பன்சேரா ஆகிய பகுதிகளை டிடிஏ கடந்த ஆண்டு இறுதி செய்தது.

பன்சீராவைத் தாண்டி விரிவாக்கத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.