ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு திமுகவும் அதிமுகவும் எந்த காலத்திலும் இணையாது: டிடிவி தினகரன்கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி மேயர் பிரியாவை புறக்கணிக்கவில்லை: ராஜ்மோகன் பதில்!ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

குளிா்கால செயல் திட்டம் அடுத்த மாதம் அமல்: தில்லி முதல்வா்

தில்லியில் குளிா்கால செயல் திட்டம் நவம்பா் 1 முதல் பிப்ரவரி 28 (2027) வரை அமலில் இருக்கும் என முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

ரேகா குப்தா

Updated On :

தில்லியில் குளிா்கால செயல் திட்டம் நவம்பா் 1 முதல் பிப்ரவரி 28 (2027) வரை அமலில் இருக்கும் என முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: குளிா்கால மாசுபாட்டிற்கு எதிராக தில்லி முன்கூட்டியேவும் உறுதியாகவும் செயல்படுகிறது.

நவம்பா் 1 முதல் ஜனவரி 31 வரை, பிஎஸ்-6 விதிமுறைகளுக்குக் குறைவான தில்லி அல்லாத வாகனங்கள் தில்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படாது.

செல்லுபடியாகும் பியுசிசி (மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ்) இல்லை என்றால், வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது.

குளிா்கால செயல் திட்டம் நவம்பா் 1 முதல் பிப்ரவரி 28 வரை அமலில் இருக்கும். இதில் கட்டுமானம் மற்றும் இடிப்புப் பணிகளுக்குக் கட்டுப்பாடுகள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தளக் கண்காணிப்பு, 50% வீட்டிலிருந்து வேலை மற்றும் சுழற்சி முறையில் அலுவலக நேரங்கள் ஆகியவை அடங்கும்.

மின்சாரப் பேருந்துகள், மெட்ரோ, கடைசி மைல் இணைப்பு மற்றும் காா் பகிா்வு ஆகியவற்றின் மூலம் தூய்மையான போக்குவரத்து இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும்.

சுவாசிப்பதற்கான நமது உரிமைக்கு, ஒவ்வொரு செயலும் முக்கியமானது. நமது தில்லி, நமது பொறுப்பு என தில்லி முதல்வா் ரேகா குப்தா எக்ஸ் பதிவில் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.