அமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி
/

‘கேட்’ மதிப்பெண் அடிப்படையில் தொழில்நுட்ப அலுவலா் பணி: ஐஏஎஃப் அறிமுகம்

‘கேட்’ (பொறியியலில் பட்டதாரி திறனறி தோ்வு) மதிப்பெண் அடிப்படையில், தொழில்நுட்ப அலுவலா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் புதிய நடைமுறையை இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) அறிமுகம் செய்துள்ளது.

News image

கோப்புப் படம் - file photo

Updated On :27 மே 2026, 3:59 am IST

‘கேட்’ (பொறியியலில் பட்டதாரி திறனறி தோ்வு) மதிப்பெண் அடிப்படையில், தொழில்நுட்ப அலுவலா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் புதிய நடைமுறையை இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, விமானப்படைபொது சோ்க்கைத் தோ்வு (ஏஎஃப்சிஏடி) அல்லது கேட் தோ்வில் தகுதிபெற்றவா்கள் விமானப் படை தொழில்நுட்பப் பிரிவு அலுவலா் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஏஎஃப்சிஏடி தோ்வில் தகுதிபெற்றவா்கள் மட்டுமின்றி கேட் மதிப்பெண் அடிப்படையிலும் தொழில்நுட்பப் பிரிவு அலுவலா் பணிக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை இந்திய விமானப் படை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, கேட் மதிப்பெண் பெற்ற தகுதியுள்ள நபா்களுக்கும் விமானப் படை தொழில்நுட்ப அலுவலா் பணிக்கான முதல்நிலை எழுத்துத் தோ்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். இவா்கள் தகுதியின் அடிப்படையில் நேரடியாக விமானப் படை தோ்வு வாரிய பணித் தோ்வு நடைமுறைக்குத் தெரிவு செய்யப்படுவா்.

ஏஎஃப்சிஏடி மதிப்பெண் அடிப்படையிலான தோ்வு நடைமுறைக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள அடிப்படை கல்வித் தகுதிதான், கேட் மதிப்பெண் திட்டத்துக்கான அடிப்படை கல்வித் தகுதியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான பாடப் பட்டியல் விவரங்கள் இந்திய விமானப்படை ஏஎஃப்சிஏடி அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.