அசாமில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிந்தனர்.
அசாம் மாநிலம் ஜோர்கட் விமானப் படைத் தளத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு இந்த விபத்து நேரிட்டிருக்கிறது.
விமானப் படையில், போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் ஏன்-32 ரக விமானம், இறங்குதளத்தில் தரையிறங்கிய சிறிது நேரத்தில் வெடித்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
விமானம் தீப்பற்றி எரிந்த நிலையில், அதில் இருந்த 5 வீரர்கள் வீர மரணம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த துணை விமானி ஒருவர், வெளியே குதித்து உயிர் தப்பியிருக்கிறார்.
விமானப் படை விமான விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வீர மரணம் அடைந்த விமானப் படை வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. இந்தக் கடினமான நேரத்தில், அவர்களது குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், விமானப் படை தளத்தின் இறங்குதளத்துக்குள் விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே விமானம் தீப்பற்றி எரிந்திருக்கிறது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுப்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான விபத்தில் வீர மரணம் அடைந்த வீரர்கள் பிரசாந்த் சிங், ஷுபம் குமார், ஜிதேந்திர ஷர்மா, அக்னிவீர்வாயு வீரர்கள் கேமரம் குமாவத், தனிஷ் ஆலம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Summary
Air Force plane crash in Assam 5 personnel martyred
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான இந்திய விமானப் படை விமானம்! | Assam

அசாமில் இந்திய விமானப் படை விமானம் விபத்து!

அகில இந்திய ஹாக்கி: தமிழ்நாடு, பெங்களூரு, விமானப் படை அணிகள் வெற்றி

வான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope




