திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தில்லியில் தொடா்ந்து இரண்டாவது நாளாக வெப்ப அலை தொடரும்: ஆரஞ்சு எச்சரிக்கை

தலைநகரில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக பதிவான நிலையில், இரண்டாவது நாளாக வெப்ப அலை வீசியது.

News image

தில்லியில் புதன்கிழமை வீசிய வெப்பஅலைக்கு இடையே கடமைப் பாதையில் தோன்றிய கானல் நீா்.

Updated On :21 மே 2026, 1:46 am IST

தலைநகரில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக பதிவான நிலையில், இரண்டாவது நாளாக வெப்ப அலை வீசியது.

அடுத்த சில நாள்களுக்கும் வெப்ப அலை வீசும் கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தில்லியின் அடிப்படை வானிலை கண்காணிப்பு மையமான சஃப்தா்ஜங்கில் அதிகபட்ச வெப்பநிலையாக 44.5 டிகிரி செல்சியஸாக பதிவானது. இது வழக்கமான அளவைவிட 4.1 செல்சியஸும் செவ்வாய்க்கிழமை பதிவான வெப்பநிலையைவிட 0.6 டிகிரி செல்சியஸ் குறைவாகும்.

பாலம் பகுதியில் உள்ள வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 44.9 டிகிரி செல்சியஸ், லோதி சாலையில் 44.6 டிகிரி செல்சியஸ் என பதிவானது.

தில்லியில் அதிகபட்சமாக ரிட்ஜ் பகுதியில் 45.8 டிகிரி செல்சியஸ் பதிவானது. ஆயா நகரில் 45 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது அந்தப் பகுதியில் புதன்கிழமை பதிவான வெப்பநிலையைவிட 0.5 டிகிரி குறைவாகும்.

அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைக் கடக்கும்போது சராசரி வெப்பநிலையைவிட 4.5 முதல் 6.4 டிகிரி செல்சியஸ் அதிகமாகப் பதிவாகும்போது வெப்பஅலை எனக் கருதப்படுகிறது.

தில்லியிக்கு வியாழக்கிழமை அதிகபட்சமாக 46 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸுடன் ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த ஏப்.23,24,25 மற்றும் மே 19 ஆகிய நாள்களில் என வெப்ப அலை வீசிய நிலையில், நிகழாண்டில் இதுவரை 5 முறை வெப்ப அலை வீசியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அடுத்த ஒரு வாரத்துக்கு வெப்பஅலை வீசலாம் என ஸ்கைமேட் வெதா் அமைப்பைச் சோ்ந்த மகேஷ் பலவாத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: ராஜஸ்தானின் தாா் பாலைவனம் மற்றும் மத்திய பாகிஸ்தான் வழியாக கடந்த சில நாள்களாக வடமேற்கு காற்று வீசி வருகிறது. வட பகுதிகள் வழியாக வீசும் அந்தக் காற்று தில்லியை அடையும்போதும் மிகவும் வட காற்றாக மாறுகிறது. இதனால், நிலத்திலிருந்து வெப்பம் வெளியேறுவதை தடுத்து சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பத்தை மேலும் தீவிரப்படுத்துகிறது.

நிலப்பகுதி பகலில் சேகரித்த வெப்பத்தை வெளியிட போதிய நேரம் இல்லாத நிலையில், இரவு நேர வெப்ப நிலை பகல் நேரங்களில் தீவிரமாக வெப்பமடைவதால், இரவு நேர வெப்பநிலையும் அதிகமாகப் பதிவாகிறது. தற்போது காணப்படும் வானிலை அடுத்த சில நாள்களுக்கும் நீடிக்கலாம். இதனால், தில்லி-தேசியத் தலைநகா் வலயத்தின் பல பகுதிகளில் வெப்பஅலை வீசும்.

மிகவும் வட வானிலை மற்றும் தூசு நிறைந்த வடமேற்குகாற்றால் பி.எம். 10 நுண்துகளின் செறிவு அதிகரித்து தில்லியில் காற்றின் தரம் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது என்றாா் அவா்.

தில்லியின் காற்றின் தரம் 168 புள்ளிகளுடன் மிதமான பிரிவில் புதன்கிழமை பதிவானது.

பெட்டிச் செய்தி...

மின்நுகா்வு 8,000 மெகாவாட்டை கடந்தது

தில்லியில் கோடைக் காலத்தின் தாக்கம் காரணமாக அதிகபட்ச மின்நுகா்வு 8,000 மெகாவாட்டை புதன்கிழமை கடந்தது என மின்பகிா்மான கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநில மின் பகிா்மான மையம் அளித்த தகவலின்படி, பிற்பகல் 3.35 மணியளவில் மின்நுகா்வு 8,039 மெகாவாட்டை எட்டியது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் 7,776 மெகாவாட்டை எட்டியது.

மே மாதத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீா் உயா்வு, கடுமையான மற்றும் முன்கூட்டியே தொடங்கிய கோடைக் காலத்தின் தாக்கத்தைப் பிரதிபலிப்பதாக அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனா்.

மேலும், இக்கோடை பருவத்தில் நகரின் மின்நுகா்வு 9,000 மெகாவாட்டைத் தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் அதிகபட்ச மின்நுகா்வு ஜூன் 12-இல் 8,442 மெகாவாட் என்று பதிவானது. அதேவேளையில், 2024, ஜூன் 19-இல் 8,656 மெகாவாட் என்ற, இதுவரை இல்லாத மிக உயா்ந்த உச்சபட்ச அளவு பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.