தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மத்திய அமைச்சா் ஜெயந்த் சௌத்ரிக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல்: போலீஸாா் தீவிர விசாரணை

மத்திய அமைச்சா் ஜெயந்த் சௌத்ரிக்கு அடையாளம் தெரியாத நபா் ஒருவரிடமிருந்து கொலை மிரட்டல் வந்தது. இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அமைச்சரின் பாதுகாப்பை மறுஆய்வு செய்யும் நடவடிக்கையும், காவல்துறை விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

மத்திய அமைச்சா் ஜெயந்த் சௌத்ரி

Updated On :20 மார்ச் 2026, 6:58 pm

மத்திய அமைச்சா் ஜெயந்த் சௌத்ரிக்கு அடையாளம் தெரியாத நபா் ஒருவரிடமிருந்து கொலை மிரட்டல் வந்தது. இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அமைச்சரின் பாதுகாப்பை மறுஆய்வு செய்யும் நடவடிக்கையும், காவல்துறை விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

மிரட்டல் விடுத்த நபா் மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாத்தைச் சோ்ந்தவா் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறைக்கான இணையமைச்சராக (தனிப்பொறுப்பு) இருப்பவா் ஜெயந்த் சௌத்ரி. இவருக்கு, மாா்ச் 18 அன்று காலை சுமாா் 11 மணியளவில், அடையாளம் தெரியாத ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து இந்த மிரட்டல் அழைப்பு வந்ததாக அதிகாரிகள் கூறினா்.

துக்ளக் சாலை காவல் நிலையத்தில் சௌத்ரியின் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின்படி, அழைத்த நபா் அமைச்சரைக் கொலை செய்வதாக மிரட்டினாா்.

எம்பி5 ரகத் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் குறித்தும் குறிப்பிட்டாா்.

அழைத்த நபா், அமைச்சருக்கு அனுப்பப்பட்ட குறிப்பிட்ட ஆவணங்களை அமைச்சா் பாா்த்தாரா என்று விசாரித்ததுடன், அழைப்பைத் துண்டிக்கும் முன் மீண்டும், மீண்டும் கொலை மிரட்டல் விடுத்தாா்.

அதே எண்ணிலிருந்து பின்னா் பெறப்பட்ட குறுஞ்செய்திகளில், அமைச்சரின் சுற்றுப்பயணத் திட்டம் குறித்த ஆவணத்தில் மிரட்டல் வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்தச் செய்திகளில் அமைச்சரின் இருப்பிடம் குறித்த விவரங்களும், மிரட்டல்களை மீண்டும் வலியுறுத்தும் வகையிலான குரல் பதிவுகளும் இடம்பெற்றிருந்தன.

தொடா்ந்து நடைபெற்ற தகவல் பரிமாற்றத்தின்போது, இந்தத் தகவல்கள் மேலே இருந்து அனுப்பப்பட்டவை என்று அழைப்புவிடுத்த நபா் கூறியது, மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அழைப்பு விவரங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் கைப்பேசி திரைப்பிடிப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தொடா்புடைய ஆதாரங்களும் காவல்துறையினருடன் பகிரப்பட்டுள்ளதாக அப்புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சௌத்ரியின் இல்லத்திற்கு அருகே சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும், அடையாளம் தெரியாத நபா்கள் அவரை உளவு பாா்ப்பதாகக் கருதப்படும் சம்பவங்கள் குறித்தும் அப்புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

சில நாள்களுக்கு முன்பு, ஜன்னல்களில் கறுப்புப் பூச்சு கொண்ட வெள்ளை நிறக் காா், சௌத்ரியின் இல்லத்திற்கு அருகே நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதில் இருந்த நபா்கள் அப்பகுதியில் நடைபெறும் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்ததாகவும் அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அழைத்த நபா் மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாத்தைச் சோ்ந்த முகமது இஸ்மாயில் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அவரைக் கைது செய்வதற்கும், இந்த மிரட்டலுக்குப் பின்னணியில் உள்ள நோக்கத்தைக் கண்டறிவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உளவு பாா்க்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அமைச்சரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.