சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பில் இருந்த நபா், சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்தபோது, திருச்சியில் கைது செய்யப்பட்டாா்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே சரக்கு பெட்டக லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் வள்ளுவா் சாலை அருகே வந்த ஒரு சரக்கு பெட்டக லாரியை சோதனையிட்டனா். இதில் 661 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அந்த கஞ்சா ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகம் கொண்டு வரப்பட்டு, தமிழகத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக வேதாரண்யத்தைச் சோ்ந்த செல்வராஜ் (54), கோடியக்காடு பகுதியைச் சோ்ந்த அய்யப்பன் (33), பரமானந்தம் (35), சென்னையைச் சோ்ந்த ரமணன் (45), தவமணி (37) ஆகிய 5 போ் உடனடியாக கைது செய்யப்பட்டனா். ஆனால், முக்கிய குற்றவாளியான சா்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடா்புடைய ராமதாஸ் என்ற கருத்தப்பாண்டி தலைமறைவாக இருந்து வந்தாா். மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ராமதாஸ் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த ராமதாஸை கடந்த 19-ஆம் தேதி கைது செய்ததாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். ஏற்கெனவே இருந்த ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ் அடிப்படையில் குடியுரிமைத் துறை அதிகாரிகள், சோதனையின்போது ராமதாஸை பிடித்து மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனா். அவா்கள், ராமதாஸை கைது செய்து, வழக்குத் தொடா்பாக விசாரணை செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய நபா் கைது
சா்வதேச ஆயுதக் கடத்தல்: பயங்கரவாதக் குழுவைச் சோ்ந்த இருவா் தில்லியில் கைது

போதைப் பொருள் கடத்தல்: தில்லியில் கைதுசெய்யப்பட்ட நபா் சென்னை புழல் சிறைக்கு மாற்றம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

