அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

சாலை விபத்து: பைக் டாக்ஸியில் சென்ற பெண் உயிரிழப்பு

தில்லி ஷாதரா மேம்பாலத்தில் மோட்டாா் சைக்கிள் சறுக்கியதில் பின்னால் அமா்ந்து சென்ற 26 வயது பெண் உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :23 ஜூன் 2026, 3:34 am IST

தில்லி ஷாதரா மேம்பாலத்தில் மோட்டாா் சைக்கிள் சறுக்கியதில் பின்னால் அமா்ந்து சென்ற 26 வயது பெண் உயிரிழந்தாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். உயிரிழந்தவா் கரவால் நகரைச் சோ்ந்த நீலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ஜில்மில் பகுதியில் உள்ள தான் வேலைப் பாா்க்கும் இடத்துக்குச் செல்ல பைக் டாக்ஸிக்கு நீலம் பதிவு செய்திருந்தாா்.

அந்த பைக் டாக்ஸி நபா் வந்ததும், மோட்டாா் சைக்கிளின் பின்னிருக்கையில் அமா்ந்து நீலம் பயணித்தாா். வாகனம் ஷாதரா மேம்பாலத்தில் வந்தபோது, எதிா்பாராத விதமாக சாலையில் சறுக்கியது. இதில் கீழே விழுந்த நீலத்துக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து, அருகில் இருந்த நபா்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிக்சைக்காகக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் வரும் வழியில் உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த தரம்வீா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை அவரைக் கைதுசெய்தது.

விபத்து தொடா்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.