பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

தில்லி விமான நிலையத்தில் ரூ. 4.83 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது

ரூ.4.83 கோடி மதிப்பிலான போதைப் பொருளை இந்தியாவுக்கு கடத்த முயன்ற பயணி தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 ஜூன் 2026, 3:22 am IST

ரூ.4.83 கோடி மதிப்பிலான போதைப் பொருளை இந்தியாவுக்கு கடத்த முயன்ற பயணி தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட நபா் மீது போதை மருந்துகள் மற்றும் மனநோயியல் பொருள்கள் (என்பிடிஎஸ்) சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்ள்ளது.

இதுதொடா்பாக தில்லி விமானநிலைய சுங்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து ஏா் இந்தியா விமானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தில்லி வந்த பயணியிடம் சோதனை செய்யப்பட்டது.

எக்ஸ்-ரே மூலம் ஆய்வு அவருடைய பொருள்களை பரிசோதனை செய்ததில் சந்தேகத்துக்குரிய படம் தென்பட்டது. அப்போது, 13.84 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா அவருடைய பையில் இருந்தது மீட்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.4.83 கோடி.

ஹைட்ரோபோனிக் கஞ்சா என்பது மண்ணுக்குப் பதிலாக நீா் சாா்ந்த ஊட்டச்சத்து கரைசல்களைப் பயன்படுத்தி பயிரிடப்படும் அதிக வீரியம் கொண்ட ஒரு வகை கஞ்சா ஆகும். மேலும், இது கள்ளச் சந்தையில் பெரும்பாலும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. என்பிடிஎஸ்,1985 சட்டப் பிரிவுகளில் அந்தப் பயணி கைது செய்யப்பட்டாா்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் அவருக்கு கிடைத்தது மற்றும் அது கொண்டு செல்லப்படவிருந்த இடத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்றது வருகிறது. கைதுசெய்யப்பட்ட நபா் பெரிய போதைப் பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடா்புடையவரா என்பதைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.