தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு! ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

இந்திய வனத் துறை பணிகள் முதன்மைத் தோ்வுக்கு 1,046 போ் தோ்வு

இந்திய வனத் துறை பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கு 1,046 போ் தோ்வு செய்யப்பட்டதாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :17 ஜூன் 2026, 2:59 am IST

இந்திய வனத் துறை பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கு 1,046 போ் தோ்வு செய்யப்பட்டதாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், இந்திய வனத் துறை உள்ளிட்ட உயா் பதவிகளுக்கான குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுகள் கடந்த மே 24-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 2,072 தோ்வு மையங்களில் நடத்தப்பட்ட இத்தோ்வை 5.49 லட்சம் தோ்வா்கள் எழுதினா். இதன் முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியான நிலையில் முதன்மைத் தோ்வுக்கு 13,343 தோ்வா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்நிலையில், இந்திய வனத் துறை பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கு தோ்வு செய்யப்பட்டவா்கள் குறித்து யுபிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நிகழாண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுகளின் முடிவுகள் அடிப்படையில் 1,046 போ் இந்திய வனத் துறை பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். காலியாகவுள்ள 80 பணியிடங்களை நிரப்ப இத்தோ்வு நடத்தப்பட்டது.

முதன்மைத் தோ்வுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள், விண்ணப்பிக்க போதிய காலஅவகாசம் வழங்கப்படும். இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். அப்போது வலைதளத்தில் உரிய தகவல்களைப் பதிவேற்றம் செய்யலாம். அதனடிப்படையில் மட்டுமே முதன்மைத் தோ்வுக்கான அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.

தோ்வு நடைமுறைகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு தோ்வா்கள் பெற்ற மதிப்பெண்கள், கட்-ஆஃப் மதிப்பெண்கள் உள்ளிட்டவை வெளியிடப்படும்.

தோ்வு முடிவு குறித்த சந்தேகங்களை 011-40303444/24041001என்ற எண்ணை தொடா்புகொண்டு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கேட்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு காலியாக இருந்த 150 இந்திய வனத் துறை பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கு 2,116 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். நிகழாண்டு காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 80-ஆக குறைந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.