தில்லியில் 4 இடங்களில் நடைபெற்ற தில்லி காவல் துறையின் 22-வது தற்காப்புக் கலை கோடைக்கால முகாம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதில் 2,100-க்கும் மேற்பட்ட பெண்களும் சிறுமிகளும் பங்கேற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவு காவல் துறையின் தற்காப்புக் கலைப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட தற்காப்புக் கலைப் பயிற்சி மற்றும் விழிப்புணா்வு அமா்வுகள் மூலம் மே 29 முதல் ஜூன் 11 வரை நடைபெற்றது.
நிறைவு விழாக்களில் காவல் இணை ஆணையா் நபம் குங்டே, கூடுதல் காவல் ஆணையா் தியோதோஷ் குமாா் சுரேந்திர சிங், காவல் துணை ஆணையா் நேஹா யாதவ் மற்றும் கூடுதல் காவல் துணை ஆணையா் ரிதிமா சேத் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பங்கேற்பாளா்களுக்குத் தற்காப்புக் கலை நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டதுடன், பெண்கள் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, சட்ட விழிப்புணா்வு, மனநலம் மற்றும் ஆளுமை மேம்பாடு குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிறைவு நிகழ்ச்சியில் தற்காப்புக் கலை செயல்விளக்கங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் பயிற்சி மையங்களுக்கான கொள்கை உருவாக்கம்: அமைச்சா் தகவல்

இந்தியா வந்தார் அபிஜித் திப்கே! தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்துக்கு அனுமதி!
காா் திருட்டில் தொடா்புடைய இருவா் கைது

தங்கச்சிமடத்தில் தற்காப்புக் கலை விழிப்புணா்வு
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



